தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், அனைவரிடமும் மிகுந்த பணிவுடன் நடந்து கொள்வார் என்பதற்குச் சான்றாக ஒரு புதிய வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவரிடம் விஜய் கைகொடுத்துப் பேசியதோடு, தனது நெஞ்சில் கை வைத்து மிகுந்த மரியாதையுடனும், நெகிழ்ச்சியுடனும் ஏதோ ஒரு விஷயத்தைப் பேசுகிறார்.
இப்படி பண்ணுவாருனு நினைக்கவே இல்ல …நெஞ்சில் கைவைத்து Emotional-ஆன Vijay#vijay #Tvk #Tamilagavettrikalagam #Viral #Trending pic.twitter.com/J6IGyTNJZ4
— Galatta Media (@galattadotcom) April 20, 2026
வழக்கமாகப் பொது இடங்களில் கூட்ட நெரிசலில் சிக்கினாலும் நிதானம் இழக்காத விஜய், ஒரு சாதாரண காவலரிடம் காட்டிய இந்த அதீத பணிவு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. “அதிகாரமும் அந்தஸ்தும் வந்த பிறகும் மனிதநேயத்தை மறக்காத தலைவர்” என எக்ஸ் (X) தளத்தில் இந்தப் பதிவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். அரசியலில் அடியெடுத்து வைத்த பிறகும், பொதுமக்களிடமும் அரசு ஊழியர்களிடமும் அவர் காட்டும் இந்த எளிமை தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
