அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில், தனியாக வசிக்கும் முதியவர்களின் நலனை அறிய ‘கன்பார்ம் ஓகே’ என்ற தானியங்கி அழைப்பு வசதி உள்ளது. ஏப்ரல் 9, 2026 அன்று காலை 6 மணிக்கு, அங்குள்ள 91 வயது மூதாட்டிக்கு இந்த அழைப்பு வந்துள்ளது.
மூன்று முறை போன் அடித்தும் அவர் எடுக்காததால், சிஸ்டம் தானாகவே போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தது. பதறிப்போன போலீசார், 6:12 மணிக்கு அந்தப் பாட்டியின் மகளுக்குத் தகவல் கொடுத்தனர். “என் அம்மா எங்கும் போகமாட்டாரே, வீட்டில்தான் இருப்பார்” என மகள் கூற, அடுத்த 7 நிமிடங்களில் போலீசார் பாட்டியின் வீட்டை முற்றுகையிட்டனர்.
கதவைத் தட்டியும் பலனில்லை, அக்கம் பக்கத்தில் விசாரித்தும் தகவல் இல்லை. கடைசியில் மகளிடம் இருந்து கார் ஷெட்டின் பாஸ்வேர்டு வாங்கி போலீசார் உள்ளே நுழைந்தனர். கையில் துப்பாக்கி, பாடி கேமரா என தியேட்டர் த்ரில்லர் காட்சி போல போலீசார் ஒவ்வொரு அறையாகத் தேடினர். ஆனால், 6:29 மணிக்கு பெட்ரூமிற்குள் சென்ற போலீசார் அப்படியே உறைந்து நின்றனர்.
அங்கே அந்தப் பாட்டி மிக நிதானமாகத் தனது செல்போனில் ‘பப்பிள் பாப்’ (Bubble Pop) என்ற வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். வெளியே போலீஸ் படையே திரண்டு நின்றது கூடத் தெரியாமல் அவர் கேமில் மூழ்கியிருந்தது போலீசாரையே வியப்பில் ஆழ்த்தியது.
இந்தச் செய்தி பரவியதும், அந்தப் பாட்டி அப்படி என்ன கேம் விளையாடினார் என்று தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வெஸ்ட்லேக் போலீசார் அந்தப் பாட்டியின் பெயரை ரகசியமாக வைத்துள்ள போதும், உலகப் புகழ்பெற்ற ‘ஜிம்மி கிம்மல் லைவ்’ போன்ற நிகழ்ச்சிகள் அவரைப் பேட்டி எடுக்கப் போட்டி போட்டு வருகின்றன. போலீசாரிடம் மன்னிப்பு கேட்ட அந்தப் பாட்டி, இப்போது இணையத்தின் லேட்டஸ்ட் ‘கேமிங் ஸ்டார்’
