தமிழக வெற்றிக் கழகம் வரும் தேர்தலில் பெரும் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன், நடிகை மனோ சித்ரா திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டார். ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, ‘வீரம்’, ‘நீர்ப்பறவை’ போன்ற முக்கியத் திரைப்படங்களில் நடித்த இவர், கையில் தவெக கொடியை ஏந்தியபடி கிரிவலப் பாதையில் வலம் வந்த காட்சி அங்கிருந்த பக்தர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.



​திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மிகுந்த சக்தி வாய்ந்தது என்பதால், நடிகர் விஜய் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என மனமுருகி வேண்டிக் கொண்டதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நடிகை மனோ சித்ரா தவெக கொடியுடன் கிரிவலம் சென்ற இந்தப் புகைப்படங்களும் காணொளிகளும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவதோடு, விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.