வாழ்க்கையில் நமக்கு இது கிடைக்கவில்லை, அது கிடைக்கவில்லை என்று புலம்புபவர்களுக்கு ஒரு பாடமாக, சமூக வலைதளங்களில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இரு கைகளும் இல்லாத ஒரு சிறுமி படிக்கட்டில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் அவரது நண்பர்கள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தன்னால் எழுந்து ஓட முடியவில்லையே, மற்றவர்களைப் போல கைகள் இல்லையே என்ற எந்த வருத்தமும் இல்லாமல், அந்தச் சிறுமி தனது நண்பர்களின் மகிழ்ச்சியைக் கண்டு வாய்விட்டுச் சிரிக்கும் காட்சிகள் பார்ப்பவர்களைக் கண் கலங்க வைக்கிறது. @deeva_2024 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, “வெறும் சிரிப்பு மட்டுமே எல்லா துக்கங்களையும் மறக்கச் செய்துவிடும்” என்ற வாசகத்துடன் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “எல்லா வசதிகளும் இருந்தும் நாம் மகிழ்ச்சியாக இல்லை, ஆனால் இந்தச் சிறுமி நம்மை விடப் பணக்காரர்” என உருகி கமெண்ட் செய்து வருகின்றனர். “கடவுள் இவரை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்” எனப் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். துயரமான சூழ்நிலையிலும் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்பதை அந்தச் சிறுமியின் முகம் உலகுக்கு உணர்த்தியுள்ளது.
