இயற்கையின் விந்தைகளில் ஒன்றான ‘டாசன்’ வகை தேனீக்களின் இனப்பெருக்கக் காலப் போராட்டம் பார்ப்பவர்களை உறைய வைக்கிறது. பூமிக்கு அடியில் ஓராண்டு காலமாகப் பதுங்கியிருந்து, இனப்பெருக்கத்திற்காக வெளியே வரும் ஒரே ஒரு பெண் தேனீயைக் கவர, நூற்றுக்கணக்கான ஆண் தேனீக்கள் போட்டி போடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஒரு பெண் தேனீ வெளியே வந்த உடனே, அதைச் சுற்றி டஜன் கணக்கான ஆண் தேனீக்கள் ஒரு ‘பந்தைப்’ போல மொய்த்துக் கொள்கின்றன. தங்களுக்கென ஒரு வாய்ப்பைப் பெற, அந்த ஆண் தேனீக்கள் தங்களின் வலிமையான தாடைகளையும், முட்கள் நிறைந்த கால்களையும் ஆயுதமாகப் பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்கின்றன. இந்த வெறித்தனமான மோதலில் சில சமயங்களில் பல தேனீக்கள் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழக்கின்றன.
After nearly a year underground, the female Dawson’s burrowing bee finally emerges—and is instantly swarmed.
Outnumbered dozens to one, males pile on in a frantic mating ball, using powerful jaws and spiny legs to fight for a single chance to mate. The chaos can be deadly, with… pic.twitter.com/36tPsICeZb
— National Geographic Animals (@NatGeoAnimals) April 16, 2026
“காதல் என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல, அது ஒரு வாழ்வாதாரப் போராட்டம்” என்பதை இந்தத் தேனீக்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான தேனீக்கள் ஒரே இடத்தில் கூடி நடத்தும் இந்த ஆக்ரோஷமான காதல் போர், இயற்கையின் ஒரு கொடூரமான அதே சமயம் வியக்கத்தக்கப் பக்கத்தை நமக்குத் தோல் உரித்துக் காட்டுகிறது.
