இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில், இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
முதலில் விளையாடிய இந்தியா, கே.எல். ராகுல் (100), சுப்மன் கில் (126) மற்றும் ரிஷப் பந்த் (81) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 564 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் தனது முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 112 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது.
இந்த வெற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் சேராது என்றாலும், இந்திய வீரர்களின் ஆதிக்கம் இந்த ஆட்டத்தில் தெளிவாகத் தெரிந்தது. இந்தக் கடுமையான கோடை வெப்பத்தில் 41 டிகிரி செல்சியஸ், மைதானத்திற்கு வந்திருந்த ரசிகர்களுக்குப் போதிய குடிநீர் வசதி இல்லை.
தாகத்தால் தவித்த ரசிகர்களைக் கண்ட ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, தனது அணியிடம் இருந்த தண்ணீர் பாட்டில்களை ரசிகர்களுக்குக் கொடுத்து அவர்களின் தாகத்தைத் தணித்தார்.
Afghanistan captain Hashmatullah Shahidi gives water and cold drinks to Indian fans in the scorching heat in Chandigarh during the India vs Afghanistan Test match. ❤️🇦🇫🇮🇳
A nice gesture from the Afghan captain. pic.twitter.com/sfpUWfGIrs
— Sonu (@Cricket_live247) June 8, 2026
“>
இவரது இந்த மனிதாபிமானச் செயல் அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது. அதேபோல், இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பல வீரர்களும் ரசிகர்களுக்குத் தண்ணீர் கொடுத்து உதவியது அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
