தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரரிடம் பயணி ஒருவர் செய்த மாயாஜால வித்தை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அந்தப் பயணி வீரரின் ஒரு கையில் ‘X’ என்ற அடையாளத்தை வரைந்து, அதைத் தேய்த்து மாயமாக மறையச் செய்கிறார். பின்னர், தான் தொடவே இல்லாத அந்த வீரரின் மற்றொரு கையைத் திறந்து பார்க்கச் சொல்ல, அங்கே அதே ‘X’ அடையாளம் அப்படியே இருப்பதைப் பார்த்து அந்த வீரரும் அங்கிருந்தவர்களும் ஒரு நிமிடம் திகைத்துப் போயினர்.
இந்த சுவாரசியமான வீடியோவை பார்த்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் தங்களின் ஆச்சரியத்தை புன்னகையோடு வெளிப்படுத்தினர். மிகவும் வேகமாகச் செய்யப்பட்ட இந்த மேஜிக் ட்ரிக் பார்ப்பதற்கு உண்மையான மந்திரம் போலவே இருந்ததால், இணையவாசிகள் இதனைத் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
“பாதுகாப்பு வீரரையே மிரள வைத்துவிட்டாரே!” என்றும் “இது மிகவும் புத்திசாலித்தனமான வித்தை” என்றும் மக்கள் இந்த வீடியோவிற்கு வேடிக்கையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
