தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரக் களத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடையே வார்த்தைப் போர் முற்றியுள்ள நிலையில், சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திமுக அரசு அறிவித்துள்ள ரூ.8,000 மதிப்பிலான மகளிர் உதவித் திட்டக் கூப்பன்கள் குறித்துப் பேசிய முதலமைச்சர், “இந்த கூப்பனில் என்ன வாங்கலாம் என்று உங்கள் வீட்டுக்காரர்களிடம் (கணவர்) கேட்டுக்கொண்டிருக்காதீர்கள், அவர்கள் உங்களைக் குழப்பிவிடுவார்கள்” என்று ஜாலியாகக் குறிப்பிட்டார். மேலும், “கூப்பனை வைத்துப் பொருட்கள் வாங்குவதில் கணவர் ஏதேனும் பிரச்சினை செய்தால், அண்ணன்கிட்ட (ஸ்டாலின்) சொல்லிவிடுவேன் என்று மட்டும் சொல்லுங்கள், எல்லாம் சரியாகிவிடும்” என அவர் கூற, அங்கிருந்த பெண்கள் அனைவரும் உற்சாகத்தில் கைதட்டி குலுங்கி குலுங்கிச் சிரித்தனர்.
“ரூ.8000 கூப்பனில் என்ன வாங்கலாம்னு வீட்டுக்காரர் கிட்டலாம் கேட்காதீங்க.. குழப்பிவிட்ருவாங்க
எதாவது பிரச்னை பண்ணாங்கனா அண்ணன்கிட்ட சொல்லிவிடுவனு சொல்லுங்க” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச பேச ஆரவாரம் செய்ததோடு குலுங்கி குலுங்கி சிரித்த பெண்கள்#MKStalin | #ElectionWithPT |… pic.twitter.com/XJyDakmxBU
— PttvOnlinenews (@PttvNewsX) April 15, 2026
“>
தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும் பெண்களின் மனதை வெல்லும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட இந்த ‘கூல்’ பேச்சால் அந்த இடமே கலகலப்பாகக் காணப்பட்டது.
