நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் அரசியல் உழைப்பைப் பாராட்டி, பிரபல திரைப்பட இயக்குநர் சேரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சீமான் மற்ற கட்சிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு அரசியல் செய்பவர் அல்ல என்றும், அப்படி இருந்தால் அவர் வெயில், மழை என்று பாராமல் இவ்வளவு கடுமையாக உழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சேரன் குறிப்பிட்டுள்ளார்.

சீமானின் இந்த ஓயாத ஓட்டத்திற்குத் தன் மீதும், தன்னை நம்பும் மக்கள் மீதும் அவர் வைத்துள்ள தீராக் காதலே காரணம் எனப் புகழ்ந்துள்ள சேரன், மக்களின் சிந்தனையைத் தூண்டுவதே சீமானின் உண்மையான இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.

வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சீமான் காரைக்குடி தொகுதியில் களம் காண்கிறார். 117 ஆண்கள் மற்றும் 117 பெண்கள் என சம உரிமையுடன் வேட்பாளர்களை நிறுத்தி அவர் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

சீமானை நம்பி களம் இறங்கியுள்ள 234 தம்பி, தங்கைகளின் நம்பிக்கை வீண் போகக் கூடாது என்று கூறியுள்ள சேரன், மக்கள் ஏன் மாற்றம் வேண்டும் என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“>

 

சீமானின் தன்னம்பிக்கையும் உழைப்பும் நம் முன் உயர்ந்து நிற்பதாக அவர் அந்தப் பதிவில் நெகிழ்ந்துள்ளார்.