சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு காணொளி, இந்திய கிராமப்புற வாழ்க்கையின் எதார்த்தத்தையும் விலங்குகளின் அபாரமான அறிவையும் உலகிற்கு பறைசாற்றியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு விவசாயி நாள் முழுவதும் வயலில் உழைத்த களைப்பில் தனது மாட்டு வண்டியில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்க, அவரது காளைகள் எந்த வழிகாட்டுதலும் இன்றி மிகச் சரியாகப் பாதைகளைத் தேர்ந்தெடுத்து அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றன.
வளைவுகளில் திரும்புவது முதல் உரிமையாளரின் வீட்டின் முற்றத்தை அடைவது வரை, அந்தக் காளைகள் ஒரு நவீன ஜிபிஎஸ் கருவியைப் போலவே செயல்படுகின்றன. இதைப் பார்த்த இணையவாசிகள், வியப்புடன் இதனை ‘தேசி ஆட்டோபைலட்’ என்றும் ‘இந்திய டெஸ்லா’ என்றும் வேடிக்கையாகப் பாராட்டி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும், இது இந்திய விவசாயிகளுக்கும் அவர்களின் கால்நடைகளுக்கும் இடையே இருக்கும் பல ஆண்டுகால பிணைப்பின் வெளிப்பாடாகும். இயந்திரங்களை விட விலங்குகளின் அனுபவத்தையும் புரிதலையும் நம்பும் இந்தப் பாரம்பரியம் கிராமங்களில் பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது.
View this post on Instagram
“>
தினமும் ஒரே பாதையில் சென்று வருவதால், காளைகளுக்கு அந்த வழி அத்துப்படியாகிவிடுகிறது. கடினமாக உழைக்கும் விவசாயி சோர்வில் தூங்கிவிட்டாலும், தனது மாடுகள் தன்னைப் பாதுகாப்பாக வீடு சேர்த்தும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே இந்த ‘இயற்கை தொழில்நுட்பத்தின்’ ரகசியமாகும்.
