“நீ முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில் இணைந்து சாதனை படைத்த இளைஞர் ஒருவரின் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ராணுவச் சீருடை அணிந்த இளைஞர் ஒருவர் தனது கடந்த கால வலிகளைப் பகிர்ந்து கொள்கிறார். அவர் கூறுகையில், “நான் ஒரு முஸ்லிம் என்பதால், எனது கிராமத்தில் உள்ளவர்கள் என்னை ‘பாகிஸ்தானி’ என்று அழைத்து கிண்டல் செய்வார்கள். முஸ்லிம்கள் ராணுவத்தில் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்றும், உன்னால் அதில் சேர முடியாது என்றும் கூறி மனதைக் காயப்படுத்தினார்கள்” எனத் தனது பழைய நினைவுகளைக் கூறி கண்கலங்குகிறார்.
அனைத்து தடைகளையும், அவமானங்களையும் தாண்டி இந்திய ராணுவத்தில் தேர்வாகி சாதனை படைத்த அந்த இளைஞர், “இன்று நான் சாதித்துக் காட்டிவிட்டேன்” எனப் பெருமிதத்துடன் கூறுகிறார். இது ஏதோ ஒரு பாராட்டு விழாவில் எடுக்கப்பட்ட வீடியோவாகத் தெரிகிறது. அந்த இளைஞரின் வெற்றியை அங்கிருந்த பலரும் உற்சாகத்துடன் கொண்டாடினர். இந்த வீடியோ எந்த ஊரில் எடுக்கப்பட்டது என்ற துல்லியமான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த வீடியோவைப் பார்த்த லட்சக்கணக்கான இணையவாசிகள் அந்த இளைஞருக்குத் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
मैं मुस्लिम हूँ, इसलिए गाँव में लोग मुझे पाकिस्तानी कहते थे और कहते थे कि मुस्लिमों को सेना में नहीं लिया जाता।
लेकिन मैंने उनकी बात नहीं सुनी और अपने गाँव से सेना में भर्ती होने वाला पहला मुस्लिम बना।
यही एक आम मुस्लिम की सच्ची लड़ाई है पहले समाज की सोच से, फिर अपने सपनों के… pic.twitter.com/hMD0sPzbJS
— Sandeep Khasa (@SamKhasa_) April 15, 2026
ஒரு பயனர் தனது கருத்தில், “மதத்தின் பெயரால் பாகுபாடு காட்டுபவர்களின் முகத்தில் இந்த இளைஞர் தனது உழைப்பால் பலத்த அடியைக் கொடுத்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், “யாருடைய தேசபக்தியையும் நாம் சந்தேகிக்கக் கூடாது என்பதற்கு இந்த இளைஞரின் வெற்றி ஒரு சிறந்த உதாரணம்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மேலும் இந்தியாவின் பன்முகத்தன்மையையும், ராணுவத்தின் மீது இளைஞர்கள் கொண்டுள்ள பற்றையும் பறைசாற்றும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.
