அரசியல் களத்தில் வார்த்தை போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி குறித்து உதயநிதி கடந்த ஒரு வாரமாகப் பேசி வரும் விதம் நாகரிகமற்றது என்றும், ஆபாசத்தின் எல்லைக்குச் சென்றுள்ளதாகவும் சாடினார்.
உதயநிதி Diaper போட்ட காலத்தில் எடப்பாடி MLA-வாக இருந்தவர்#salem | #annamalai | #BJP | #AIADMK | #edappadipalanisamy|#DMK | #mkstalin | #udhanidhistalin | #electioncomission | #electioncampaign | #tnelection2026 | #newsupdate |#tamiljanam pic.twitter.com/J67kk8KpwP
— Tamil Janam (@TamilJanamNews) April 13, 2026
மேலும் பேசிய அவர், “அருமைச் சகோதரர் உதயநிதி டைப்பர் அணிந்திருந்த காலத்திலேயே எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு சட்டமன்ற உறுப்பினராக (MLA) பணியாற்றியவர் என்பதை மறந்துவிடக் கூடாது” எனத் தாக்கிப் பேசினார். திமுகவினர் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் பேசலாம் என நினைக்க வேண்டாம் என்றும், ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்துகளை நாகரிகமாக முன்வைக்க வேண்டும் என்றும் அண்ணாமலை ஆவேசமாகத் தெரிவித்தார்.
