மெட்டா நிறுவனத்தின் அதிபர் மார்க் ஜூக்கர்பெர்க், எதிர்கால வேலை கலாச்சாரத்தையே மாற்றும் ஒரு விசித்திரமான மற்றும் அதிரடி திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார்.
இனி தனது ஊழியர்களுடன் நேரடியாகப் பேசுவதற்குப் பதிலாக, தன்னைப்போலவே தோற்றமளிக்கும் ஒரு அதிநவீன ‘3D AI க்ளோன்’ (3D AI Clone) மூலம் உரையாடத் திட்டமிட்டுள்ளார்.
இந்த ஏஐ க்ளோன் வெறும் பொம்மை கிடையாது; மார்க் ஜூக்கர்பெர்க்கின் குரலில் தொடங்கி, அவரது சிந்திக்கும் முறை மற்றும் முடிவெடுக்கும் திறன் வரை அனைத்தையும் துல்லியமாகக் கற்றுக்கொள்ளும் திறன் கொண்டது.
ஊழியர்கள் தங்கள் பாஸிடம் நேரில் பேசுவது போன்ற உணர்வை அப்படியே தரும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
மார்க் ஜூக்கர்பெர்க்கே முன்னின்று வடிவமைக்கும் இந்த விசித்திரமான மற்றும் உலகிலேயே முதல் முறையாகக் கையாளப்படும் இந்தத் திட்டம், தொழில்நுட்ப உலகில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளதோடு, மற்ற நிறுவனங்களும் இதைப் பின்பற்றுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
