அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள சூழலில், இது கச்சா எண்ணெய் விலையை விட மருத்துவ உலகிற்கு மிகப்பெரிய அடியைக் கொடுத்துள்ளது.
குறிப்பாக, மருத்துவமனைகளில் உள்ள எம்.ஆர்.ஐ (MRI) மெஷின்களைக் குளிரூட்டத் தேவையான ஹீலியம் வாயுவின் வரத்து முற்றிலும் நின்றுபோயுள்ளது. இந்த ஹீலியம் வாயுவை 45 நாட்களுக்கு மேல் சேமித்து வைக்க முடியாது என்பதால், கத்தாரில் இருந்து வரும் கப்பல்கள் தடைபட்டிருப்பது உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹீலியம் விலை இப்போது இருமடங்காக உயர்ந்துள்ளதால், இன்னும் சில வாரங்களில் மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்கும் வசதிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது தவிர, செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு மற்றும் ராணுவ ஏவுகணைகள் தயாரிப்பிற்குத் தேவையான சல்பர், அலுமினியம் போன்ற மூலப்பொருட்களும் இந்த வழியாகவே வருவதால், பாதுகாப்புத் துறையும் ஆட்டம் கண்டுள்ளது.
போரினால் ஏற்படும் உயிரிழப்புகளை விட, இந்த அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் போனால் ஏற்படும் பாதிப்பு “வென்டிலேட்டரில்” இருக்கும் நோயாளிகள் முதல் விண்வெளி ஆய்வுகள் வரை அனைத்தையும் முடக்கிவிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
