ராசிபுரம் பாஜக வேட்பாளரை ஆதரித்துத் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக அரசு மீது இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையான குற்றச்சாட்டு ஒன்றைத் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 250 அப்பாவி மக்களின் சிறுநீரகங்களை (Kidney) திமுகவினர் திருடியுள்ளதாக அவர் பகிரங்கமாகப் புகார் கூறினார்.

​இது திராவிட மாடல் அரசு அல்ல, ‘கிட்னி திருடும் அரசு’ என்று விமர்சித்த அவர், மக்கள் நலனை விடப் பணமே பிரதானம் என ஆளுங்கட்சி செயல்படுவதாகச் சாடினார். மேலும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், இந்த கிட்னி திருட்டில் ஈடுபட்ட அனைவரும் நிச்சயம் சிறைக்குச் செல்வார்கள் என அவர் எச்சரித்தார். தேர்தல் நேரத்தில் அண்ணாமலை கிளப்பியுள்ள இந்த விவகாரம் மாவட்ட அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.