நெல் சாகுபடிக்கான ஊக்கத்தொகையை வழங்க வேண்டாம் என மத்திய அரசு கூறியதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆதாரத்துடன் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த ஜனவரி 9-ம் தேதி தமிழக தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை வெளியிட்டுள்ள அவர், முதல்வரின் குற்றச்சாட்டு உண்மையில்லை என நிரூபித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், அந்த கடிதத்தில் தொகையைக் குறைக்கச் சொன்னது ஒரு ஆலோசனையே தவிர, அது கட்டாய உத்தரவு கிடையாது எனத் தெளிவுபடுத்தினார். மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே தேவையில்லாமல் விரிசலை உருவாக்குவதிலேயே ஸ்டாலின் ஆர்வம் காட்டுவதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த கடித விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
