அமெரிக்காவில் வசிக்கும் சாக்ஷி என்ற இந்தியப் பெண், தான் வாங்கிய ₹80 லட்சம் கல்விக்கடனை வெறும் ஓரே ஆண்டில் திருப்பிச் செலுத்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். வெளிநாட்டில் உயர்கல்வி கற்பதற்காக வாங்கிய சுமார் 1,00,000 டாலர் கடனை, தனது பெற்றோருக்குச் சுமையாக மாற்றக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

இதற்காக எவ்வித ஆடம்பரச் செலவுகளும் செய்யாமல், மிகவும் எளிமையான மற்றும் கட்டுப்பாடான வாழ்க்கை முறையை அவர் மேற்கொண்டார்.

தனது இலக்கை அடைய, அவர் பிரதான வேலைக்குச் செல்வதோடு நில்லாமல், பல பகுதிநேர வேலைகளையும் செய்து வருமானத்தைப் பெருக்கினார். வெளி உணவுகள், சுற்றுலா மற்றும் தேவையற்ற பொருட்களை வாங்குவதைத் தவிர்த்து, சிறுகச் சிறுகச் சேர்த்த ஒவ்வொரு ரூபாயையும் கடனை அடைப்பதற்கே பயன்படுத்தினார்.

 

View this post on Instagram

 

A post shared by Sakshi | Tech and Lifestyle (@dailysakshi)

“>

முறையான திட்டமிடல் மற்றும் விடாமுயற்சி இருந்தால் எவ்வளவு பெரிய கடன் சுமையையும் விரைவாகக் குறைக்க முடியும் என்பதற்கு இவரது வெற்றி ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.