தமிழக அரசியலில் அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் 233 தொகுதிகளில் தனித்துப் போட்டி என்ற விஜய்யின் அதிரடி முடிவு, பாரம்பரிய அரசியல் கட்சிகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை அவர் குறிவைப்பது திமுக போன்ற பெரிய கட்சிகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
காங்கிரஸ் மற்றும் அதிமுக போன்ற கட்சிகளுக்குள் விஜய்க்கு ஆதரவான ஒரு மறைமுக அலை வீசுவதும், அக்கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் விஜயுடன் இணைவதும் திராவிடக் கட்சிகளின் பல தசாப்த கால தேர்தல் வியூகங்களை மாற்றி அமைக்கத் தூண்டியுள்ளது.
தேசிய அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ள விஜய்யின் இந்தத் தனிப்பாதை பயணம், பழைய அரசியல் சூத்திரங்களைத் தவிடு பொடியாக்கியுள்ளது. விஜய்க்கு எதிராக எத்தகைய வியூகத்தை எடுப்பது என்று தெரியாமல் மற்ற கட்சிகள் திணறி வரும் சூழலில், வரும் மே 4-ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனித்து நின்று அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் விஜய்யின் இந்தத் துணிச்சலான முயற்சிக்கு மக்கள் மகுடம் சூட்டுவார்களா என்பது மே 4 அன்று தெரிந்துவிடும்.
