சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் உலா வந்தாலும், சில வீடியோக்கள் மட்டுமே நம்மை வியப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்லும். அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பொது விருந்து ஒன்றில் இளைஞர் ஒருவர் காட்டிய வேகம் நெட்டிசன்களை வாயடைக்க வைத்துள்ளது.

பொதுவாக விசேஷ வீடுகளிலோ அல்லது பொது விருந்துகளிலோ இலை போடுவது என்பது நிதானமாக நடக்கும் ஒரு வேலை. ஆனால், இந்த வீடியோவில் உள்ள நபர், கண்ணிமைக்கும் நேரத்தில் வரிசையாக அமர்ந்திருக்கும் அனைவருக்கும் இலையைப் போட்டுக்கொண்டே ஓடுகிறார்.

அவரது கைத்தேர்ச்சியும், துல்லியமும் எந்த அளவிற்கு இருக்கிறது என்றால், ஓடிக்கொண்டே அவர் வீசும் ஒவ்வொரு இலையும் மிகச்சரியாக அந்தந்த நபர்களின் முன்னால் போய் அமர்கிறது.

அவரது வேகத்தைப் பார்த்தால், “நிச்சயமாக இவர் ‘பண்டாரலாஜி’ (உணவு பரிமாறுதல் கலை) பிரிவில் பி.எச்டி பட்டம் பெற்றிருப்பார்” என நெட்டிசன்கள் கிண்டலாகவும், வியப்பாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சாதாரண ஒரு வேலையை இவ்வளவு நேர்த்தியாகவும், கலைநயத்துடனும் செய்ய முடியும் என்பதை இந்த இளைஞர் நிரூபித்துள்ளார். எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது பல மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.