மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அதிரடி தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் வெளியான இந்த அறிக்கையில், பெண்களைக் கவரும் வகையில் ‘பாஜகவின் தீர்மானம்’ என்ற பெயரில் மெகா அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
பாஜக ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு மாதம் 3,000 ரூபாய் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. சுமார் 10,000 முக்கியப் பிரமுகர்களிடம் ஆலோசனை நடத்தித் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, வங்காளத்தை விரக்தியிலிருந்து மீட்டு ஒரு புதிய பாதையைத் திறக்கும் என அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரவீந்திர ஜெயந்தி அன்று புதிய வங்காளம் உருவாகும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், விவசாயிகள் முதல் தொழில்துறையினர் வரை அனைத்துத் தரப்பினருக்குமான முக்கியத்துவத்தை இந்த அறிக்கை பிரதிபலிப்பதாகக் கூறினார்.
