மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள பனாசி அரசுப் பள்ளியில், மாணவர் ஒருவரை வைத்து தலைமை ஆசிரியை விசிறி விடச் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தலைமை ஆசிரியை வர்ஷா மாஞ்சி காதில் இயர்போன் மாட்டிக்கொண்டு நோட்டுப் புத்தகங்களை திருத்திக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு அருகே ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் கையில் விசிறியை வைத்துக்கொண்டு அவருக்கு விசிறி விடுகிறான். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை அன்று நடந்துள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மாவட்டஆட்சியர் பிரதிபா பால் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
<a href=”http://

“>

இந்தச் செயலுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. “இது வகுப்பறையா அல்லது கூலி இல்லா உழைப்பு வாங்கும் இடமா?” எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அந்த மாணவனின் பெற்றோர், தங்கள் பிள்ளையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் புகார் அளிக்க முன்வரவில்லை.

இதற்கிடையில், மாணவர்களை வேலையாட்கள் போல நடத்தும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர் அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. மூன்று பேர் கொண்டகுழு இந்தப் புகாரைப் பற்றி விசாரித்து வருவதால், விரைவில் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.