தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைக் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இன்று சென்னையில் வெளியிட்டார். இந்த அறிக்கையில் பொதுமக்களையும், மாணவர்களையும் கவரும் வகையில் பல அதிரடித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

​முக்கியமாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ₹2,000 வழங்கப்படும் என்றும், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் ‘டியூஷன் அக்கா’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள 3 லட்சம் அரசுப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

​அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய மற்றொரு அறிவிப்பாக, வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தில் உள்ள நாய்களுக்கு 100% தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யப்படும் என்ற திட்டமும் இடம் பெற்றுள்ளது. சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.