2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இன்று வெளியிட்டார்.
‘மக்கள் நலனே மாண்பு’ என்ற அடிப்படையில் அமைந்துள்ள இந்த அறிக்கையில், தமிழகத்தின் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ₹2,000 நிதியுதவி வழங்கப்படும் என்ற மெகா அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த ‘டியூஷன் அக்கா’ என்ற புதிய திட்டத்தையும், தமிழகத்தில் காலியாக உள்ள 3 லட்சம் அரசுப் பணியிடங்களை விரைந்து நிரப்பப்போவதாகவும் காங்கிரஸ் அதிரடி வாக்குறுதிகளை அளித்துள்ளது.
இந்த அறிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் பெற்றுக்கொண்டார்.
