திருமண விழாவில் மகிழ்ச்சியான கொண்டாட்டத்திற்கு நடுவே, ஒரு ஸ்கார்பியோ காரினால் ஒட்டுமொத்த கல்யாணமும் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மணமேடையில் அமர்ந்திருந்த மணமகன், வரதட்சணையாகத் தான் கேட்ட ஸ்கார்பியோ கார் வரவில்லை என்பதை அறிந்ததும் ஆத்திரமடைந்தார்.

மண்டபத்திலேயே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர், திடீரென மணமேடையை விட்டு இறங்கி மின்னல் வேகத்தில் ஓட்டம் பிடித்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண் வீட்டார் மற்றும் உறவினர்கள், மாப்பிள்ளையைப் பிடிக்க பின்னாடியே ஓடியதால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.

 

ஒரு காரின் ஆசைக்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையைத் துச்சமாக நினைத்து மாப்பிள்ளை செய்த இந்த அநாகரீகச் செயல் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.