நெல்லை தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நோக்கி நேரடி அரசியல் யுத்தத்தைத் தொடங்கியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். “நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தி இருந்தால் ஏன் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு இவ்வளவு மோசமாக இருக்கிறது? ஏன் போதைப்பொருள் கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி திமுக அரசை திணறடித்தார்.

​குறிப்பாக, இரண்டரை வயது குழந்தையை திமுக நிர்வாகி கொன்ற கொடூரம் மற்றும் விளாத்திகுளம் மாணவியின் மரணம் போன்ற சம்பவங்களைப் பட்டியலிட்ட அவர், “ஐந்து வருடங்களாகப் போலீஸ் டிபார்ட்மென்ட்டை கையில் வைத்துக்கொண்டு பொம்மை மாதிரியா விளையாடுகிறீர்கள்?” என ஆவேசமாகச் சாடினார். மனசாட்சியே இல்லாமல் ஆட்சி நடப்பதாக அவர் முன்வைத்த இந்தக் குற்றச்சாட்டுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.