மற்ற அரசியல் கட்சிகளைப் போலச் செய்ய முடியாத போலி வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்ற மாட்டேன் என நெல்லை தேர்தல் பிரசாரத்தில் விஜய் மிக உறுதியாகத் தெரிவித்துள்ளார். “விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கான ஆக்கபூர்வமான பல திட்டங்கள் எங்களிடம் கைவசம் உள்ளன. எங்களால் எதைச் செய்ய முடியுமோ, அதை மட்டும்தான் சொல்வோம்; சில நேரங்களில் சொல்லாத நல்ல விஷயங்களையும் மக்களுக்குச் செய்வோம்” எனப் புதிய பாணியில் பேசி அதிரடி காட்டினார்.

​மேலும், “உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள், இது நம்முடைய குடும்பங்களுக்கான தேர்தல்” என அவர் விடுத்த உருக்கமான வேண்டுகோள் தற்போது இணையதளங்களில் சென்சேஷனலாக மாறியுள்ளது. வெறும் அரசியல் லாபத்திற்காகப் பேசாமல், மக்களின் நலனை முன்னிறுத்தி விஜய் பேசியுள்ள இந்த விதம், நடுநிலை வாக்காளர்களின் கவனத்தையும் தவெக பக்கம் ஈர்த்துள்ளது.