சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1120 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1040 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,10,880 ரூபாய் க்கும், ஒரு கிராம் 13,860 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15,120 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,20,960 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,60,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
