உலகிலேயே தாய்தான் மிகப்பெரிய போராளி என்று போற்றப்படும் நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ ஒட்டுமொத்த இணையவாசிகளையும் ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின் வாசலில் தனது கைக்குழந்தையை வாக்கிங் ஸ்டாண்டில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு பெண், திடீரென தன்னை நோக்கி ஆவேசமாக வந்த ஒரு காளையைப் பார்த்ததும், குழந்தையை அப்படியே நடுரோட்டில் விட்டுவிட்டு தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்து கொண்டார்.
Heart-wrenching CCTV: Mother abandons infant in cradle as stray bull approaches, rushes inside to save herself & watches from door.
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 6, 2026
இந்த அதிர்ச்சியூட்டும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது ‘எக்ஸ்’ (X) தளத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த காளை குழந்தையை ஒன்றும் செய்யாமல் கடந்து சென்றது ஒரு பெரிய அதிர்ஷ்டம் என்றாலும், பெற்ற பிள்ளையை மரண பயத்தில் தவிக்க விட்டுவிட்டு ஓடிய அந்த தாயின் செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. “தன் உயிர் போனால் போகட்டும் என்று பிள்ளையைக் காக்கும் தாய்மார்களுக்கு மத்தியில், இப்படியும் ஒரு ‘கலியுகத் தாய்’ இருக்கிறாரா?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
