ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 250 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது.

கடினமான இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணி 207 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஆனால், சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 3-வது தோல்வியைச் சந்தித்து 10-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது ரசிகர்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக மைதானத்தில் இருந்த ஆர்சிபி ரசிகை ஒருவர், தோல்வியால் தலையில் கை வைத்து அமர்ந்திருந்த சிஎஸ்கே ரசிகரை நேருக்கு நேர் பார்த்து வினோதமான முக பாவனைகளுடன் கிண்டல் செய்து கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

விராட் கோலியின் ஆக்ரோஷமான கொண்டாட்டத்தையே மிஞ்சும் வகையில் இருந்த அந்தப் பெண்ணின் ரியாக்ஷன்களைப் பார்த்த நெட்டிசன்கள் சிரிப்பை அடக்க முடியாமல் கமெண்ட் செய்து வருகின்றனர். சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ள இந்த வீடியோ, ஐபிஎல் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.