டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியும், அதைத் தொடர்ந்து மைதானத்திலேயே உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் இடையே நடந்த காரசாரமான விவாதமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் (ஏப்ரல் 5), 157 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய லக்னோ அணி தடுமாறியபோது, கேப்டன் ரிஷப் பண்ட் (68* ரன்கள்) பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ​வெற்றி ரன்களை அடித்தவுடன் ரிஷப் பண்ட் மைதானத்தில் மண்டியிட்டு தனது நிம்மதியை வெளிப்படுத்தினார்.

இதைப் பார்த்த உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா எழுந்து நின்று கைதட்டியதுடன், போட்டி முடிந்த பிறகு பண்ட்டை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். கடந்த போட்டியில் எழுந்த விமர்சனங்களுக்கு இந்த ஒரு வெற்றி தக்க பதிலடியாக அமைந்துள்ளது.