இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா, கடந்த சில மாதங்களாக ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்கும் ‘டக் அவுட்’ சாதனையில் சிக்கித் தவித்து வருகிறார். 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெறும் 75 நாட்களில் மட்டும் இவர் 6 முறை பூஜ்ஜிய ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்று முறை டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்த அபிஷேக், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் அதே மோசமான ஃபார்மைத் தொடர்ந்து வருகிறார். ஏப்ரல் 5-ம் தேதி லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி வீசிய பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் அவர் ஆட்டமிழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு காலத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் ஷர்மாவால், தற்போது ஒரு ரன் எடுக்கக் கூட தடுமாறி வருவது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பின்னடைவாகக் கருதப்படுகிறது. 2026-ம் ஆண்டில் இதுவரை விளையாடிய 14 போட்டிகளில் 6 முறை பூஜ்ஜியத்தில் வெளியேறியது அவரது பேட்டிங் திறமை மீதான விவாதங்களை எழுப்பியுள்ளது.
இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் அவர் வெறும் 55 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடந்த சில சீசன்களில் சிறப்பாகச் செயல்பட்ட அபிஷேக், மீண்டும் தனது பழைய ஃபார்முக்குத் திரும்பி ரன்களைக் குவிப்பார் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.
