ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணிக்கு, கேப்டன் ரிஷப் பந்த் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

போட்டியின் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரிஷப் பந்த் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி 19.5 ஓவர்களிலேயே அணியை வெற்றி பெறச் செய்தார். கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி மற்றும் விமர்சனங்களுக்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றியால் லக்னோ அணி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த வெற்றியைக் கண்ட லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டார். வெற்றிக்குப் பிறகு அவர் நேரடியாக மைதானத்திற்குச் சென்று கேப்டன் ரிஷப் பந்தைக் கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

“>

 

கடந்த போட்டியில் அவர் வீரர்களைக் கடிந்து கொண்டது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அவர் வீரர்களைக் கொண்டாடும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் லக்னோ அணி நிர்வாகத்திற்கும் வீரர்களுக்கும் இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கியுள்ளதாகத் தெரிகிறது.