உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் உள்ளூர் சந்தைக்கு வந்த இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர், அங்கு பொதுக் கழிப்பறை வசதி இல்லாதது குறித்து வருத்தத்துடன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இரண்டாவது முறையாக அந்தச் சந்தைக்கு வந்துள்ள தம்மால், ஒரு கழிப்பறையைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், உள்ளூர் மக்களிடம் கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படை வசதிகள் இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் எப்படி நீண்ட நேரம் சந்தையில் இருக்க முடியும் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.

இந்தச் சந்தைக்கு அதிகப்படியான மக்கள் வர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அங்கே ஒரு பொதுக் கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தருவது அவசியமானது என்று அந்தப் பெண் இந்திய மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூர்வாசி ஒருவரால் படம் பிடிக்கப்பட்ட இந்த வீடியோ, ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தில் இவ்வளவு அடிப்படை வசதி கூட இல்லாமல் இருப்பது குறித்துப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

சுற்றுலாப் பயணிகளின் அடிப்படைத் தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.