மும்பையின் முல்லுண்ட் ரயில் நிலையத்தில் இரு இளைஞர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயில் தண்டவாளத்தில் இறங்கி அந்த இளைஞர்கள் ஆவேசமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அங்கிருந்த பயணிகளை பெரும் பீதிக்குள்ளாக்கியது.

மேலும் ரயில்வே விதிகளின்படி தண்டவாளத்தில் இறங்குவது தண்டனைக்குரிய குற்றம் என்றாலும், உயிருக்கு ஆபத்தான சூழலில் அவர்கள் மோதிக்கொண்ட விதம் ரயில்வே பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது. இந்த மோதலுக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், ரயில் நிலைய நடைமேடையில் ஏற்பட்ட சிறு தகராறு முற்றி, தண்டவாளத்தில் சண்டையிடும் அளவிற்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Parivartan News (@parivartan_news)

“>

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரயில் நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் ரயில்களின் இயக்கத்தை பாதிப்பதோடு, உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கும் என பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.