தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதம் இப்போது சமூக வலைதளங்களில் பெரும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. விஜய் அவர்களுக்குப் பாதுகாப்பு கோரி எழுதப்பட்ட அந்தப் புகாரில், தற்போது பதவியில் இல்லாத முன்னாள் அதிகாரியின் பெயரை அவர் குறிப்பிட்டுள்ளதுதான் இந்தச் சர்ச்சைக்கும் விமர்சனத்திற்கும் முக்கியக் காரணமாகியுள்ளது.

​கடந்த 2024-ஆம் ஆண்டிலேயே உள்துறைச் செயலர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்ட அஜய் பல்லா என்பவருக்கு நிர்மல் குமார் இந்தக் கடிதத்தை முகவரியிட்டுள்ளார். தற்போது அந்தப் பதவியில் கோவிந்த் மோகன் என்பவர் பணியாற்றி வரும் நிலையில், அடிப்படைத் தகவலைக் கூடச் சரிபார்க்காமல் தவெக நிர்வாகி இப்படிச் செயல்பட்டது அரசியல் வட்டாரத்தில் ‘செம’ பேசுபொருளாக மாறியுள்ளது.