பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாதுரை (50) என்ற ஹோட்டல் தொழிலாளி, வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்த தனது மகன் ராஜதுரையை தட்டிக்கேட்டுள்ளார். கடந்த 28-ம் தேதி தந்தை மற்றும் மகன் இருவரும் மது அருந்திவிட்டு வந்த நிலையில், இவர்களுக்குள் இது தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த ராஜதுரை, அருகில் இருந்த கூர்மையான கம்பியால் தனது தந்தையின் நெஞ்சில் குத்தியதில் அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார் இந்தக் கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், அண்ணாதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பியோடிய ராஜதுரையை போலீசார் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு சிறிய குடும்பத் தகராறு கொலையில் முடிந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
