ஈரோடு அருகே சாலையோரம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவர், கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். அவ்வழியே வந்த பேருந்து ஓட்டுநர் ஹாரன் அடித்த சத்தத்தில் மிரண்ட ஆடுகள், திடீரென சாலைக்கு ஓடியுள்ளன. இதனால் மற்ற வாகன ஓட்டிகள் வாகனத்தை சடன் பிரேக் போட்டு நிறுத்த, பின்னால் வந்த அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாமல் சாலையோரம் நின்று கொண்டிருந்த விவசாயி மீது மோதி ஏறி இறங்கியுள்ளது.
இந்தக் கோர விபத்தில் விவசாயி உயிரிழக்க, அதே நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பி அதிர்ஷ்டவசமாகப் பிழைத்துள்ளனர். தேர்தல் நேர பரபரப்புக்கு மத்தியில் நடந்த இந்தச் சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் தற்போது காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
