தந்தையுடன் ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக, மூன்றரை வயதுக் குழந்தையை ஒரு நபர் ஆவேசமாகத் தரையில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபர், குழந்தையின் தந்தையுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சண்டை முற்றிய நிலையில், ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், அங்கிருந்த அந்தச் சிறுவனை வலுக்கட்டாயமாகப் பிடித்துச் சென்று தரையில் பலமாகத் தூக்கி வீசியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் அந்தக் குழந்தை ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தது. பிஞ்சு என்றும் பாராமல் ஒரு நபர் செய்த இந்த மனிதாபிமானமற்ற செயல் அங்கிருந்தவர்களை உறைய வைத்தது.
वडिलांसोबत झालेल्या किरकोळ वादाचा सूड घेण्यासाठी एका नराधम रिक्षाचालकाने साडेतीन वर्षांच्या निष्पाप चिमुरड्याला जमिनीवर आपटून जीवे मारण्याचा प्रयत्न केल्याची धक्कादायक घटना वसईत घडली आहे. pic.twitter.com/uVuieBhc6b
— Saamana Online (@SaamanaOnline) March 31, 2026
படுகாயமடைந்த குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழிவாங்கும் உணர்வால் ஒரு குழந்தைக்கு இப்படி ஒரு கதி நேர்ந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
