ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவிற்கு ஆதரவாக இங்கிலாந்து களம் இறங்கியுள்ளது. உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான இப்பகுதியில், ஈரானின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களை முறியடிக்க பிரிட்டிஷ் கடற்படை தனது போர்க்கப்பல்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
மேலும் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து இங்கிலாந்து மேற்கொள்ளும் இந்த தீவிர கண்காணிப்பு, ஈரானின் ஆக்கிரமிப்பு முயற்சிகளை முறியடிப்பதோடு, உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் மற்றும் எல்ஜிபி விநியோகம் எவ்வித தடையுமின்றி சீராக நடைபெறுவதை உறுதி செய்கிறது.
இந்த மூலோபாயக் கூட்டணியால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்களுக்கு முழுமையான பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. ஈரானின் வெடிமருந்துகள் மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல்கள் இனி எடுபடாது என்கிற நிலையில், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயராமல் தடுக்க இந்த நடவடிக்கை முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் தொழில்நுட்ப வலிமையும், இங்கிலாந்தின் கடற்படை வியூகமும் இணைந்துள்ளதால், ஈரானின் பிடியில் சிக்காமல் சரக்குக் கப்பல்கள் அதிவேகமாகவும் பாதுகாப்பாகவும் தங்களது இலக்கை சென்றடையும் சூழல் உருவாகியுள்ளது. இது உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஒரு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
