லெஜண்ட் சரவணன் நடிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நகைச்சுவை நடிகர் அறந்தாங்கி நிஷா, தனது கணவருடன் ஊர் சுற்றிய கதைகளை நீண்ட நேரம் மேடையில் பகிர்ந்து கொண்டார்.
மேலும், தனக்கு லெஜண்ட் சரவணன் சாருக்கு ஜோடியாக நடிக்க ஆசை இருப்பதாகவும் அவர் ஜாலியாகத் தெரிவித்தார்.
நிஷாவின் பேச்சைத் தொடர்ந்து மேடையேறிய நடிகர் விடிவி கணேஷ், விழாவிற்குச் சம்பந்தமில்லாமல் தனது குடும்பக் கதைகளைப் பேசிய நிஷாவைக் கடுமையாக விமர்சித்தார்.
“கொஞ்சம் கூட விவஸ்தை இல்லையா, இந்த விழாவில் உங்கள் கணவருடன் ஊர் சுற்றிய கதையையெல்லாம் ஏன் பேசுகிறீர்கள்?” என்று அவர் நேரடியாகக் கேட்டது அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
சமீபகாலமாக சினிமா விழாக்களில் இதுபோன்ற மோதல்களும் தேவையில்லாத தனிப்பட்ட பேச்சுகளும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
