பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு, சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பது டிஎன்ஏ சோதனையில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜாய் கிரிசில்டா விடுத்த கோரிக்கையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய அனுமதியின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சோதனையின் முடிவில் உண்மை உறுதி செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

முன்னதாக நடந்த விசாரணையில், “டிஎன்ஏ சோதனையில் நான்தான் தந்தை என்று தெரியவந்தால், குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்ளத் தயார்” என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்திருந்தார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.