அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI-ன் இயக்குநர் காஷ் படேலின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கை ஈரான் ஹேக்கர்கள் ஊடுருவித் தாக்கியுள்ளனர். ‘ஹண்டலா ஹேக் டீம் என்ற குழு, 2010 முதல் 2019 வரையிலான அவரது தனிப்பட்ட மற்றும் அலுவலக ரீதியான மின்னஞ்சல் மாதிரிகளை இணையத்தில் வெளியிட்டுள்ளது.
இதில் காஷ் படேலின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பயோடேட்டா போன்ற முக்கியத் தகவல்களும் கசிந்துள்ளன. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்காவின் மிக உயரிய பாதுகாப்பு அமைப்பின் தலைவரையே குறிவைத்து இந்தச் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ் படேலின் மின்னஞ்சல்கள் திருடப்பட்டிருப்பதை அமெரிக்க நீதித்துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து FBI இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
