தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
தமிழக தேர்தல் களத்தில் இந்த முறை பலத்த போட்டி நிலவுகிறது. அதன்படி திமுக கூட்டணி 2. அதிமுக கூட்டணி 3. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 4. நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. திமுக நேரடியாக 164 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் மீதமுள்ள 70 இடங்களிலும் களம் காண்கின்றன.
வெளியாகியுள்ள வேட்பாளர் பட்டியலில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு மீண்டும் அவரது சொந்தத் தொகுதியான திருவெறும்பூர் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் இத்தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாகப் போட்டியிடுகிறார்
வேட்பாளர் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விடுத்துள்ள செய்தியில்,
“கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பின்படி, எனது தாய் வீடான திருவெறும்பூர் தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிடுகிறேன். இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் வாழ்த்துகளுடனும், முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் வழிகாட்டுதலுடனும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். திராவிட மாடல் 2.O ஆட்சியில், ‘அன்பிலின் திருவெறும்பூர் 3.0’ என்ற இலக்கை உழைப்பின் மூலம் உறுதி செய்வோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
