மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே வெடித்துள்ள போர், மூன்றாம் உலகப்போராக மாறுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பே உலக நிகழ்வுகளைத் துல்லியமாகக் கணித்த பல்கேரியாவின் ‘பாபா வங்கா’ மற்றும் பிரான்சின் ‘நோஸ்ட்ராடாமஸ்’ ஆகியோரின் கணிப்புகள் இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன.
2026-ம் ஆண்டில் ஒரு மிகப்பெரிய உலகளாவிய மோதல் ஏற்படும் என்று பாபா வங்கா ஏற்கனவே கணித்திருந்தார். தற்போது நடக்கும் ஈரான்-இஸ்ரேல் போர் மற்றும் அமெரிக்காவின் தலையீடு ஆகியவை அவர் சொன்னது போலவே நடப்பதாகப் பலரும் நம்புகின்றனர்.
ஆனால், இந்தப் போர் எப்போது முடியும்? என்பதற்கு பாபா வங்காவின் குறிப்புகளில் தெளிவான விடை இல்லை. அதே சமயம், புகழ்பெற்ற ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸ் தனது புத்தகத்தில், “7 மாதங்கள் நீடிக்கும் பெரும் போர், தீமையால் மக்கள் அழிவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் போர் பிப்ரவரி இறுதியில் தீவிரமடைந்ததைக் கணக்கில் கொண்டால், நோஸ்ட்ராடாமஸின் கணிப்புப்படி செப்டம்பர் மாதத்திற்குள் ஒரு முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
‘புதிய பாபா வங்கா’ என்று அழைக்கப்படும் செலினா அவலோன், ஈரானில் ஒரு இளம் தலைவரின் எழுச்சி மற்றும் அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்றும் கணித்துள்ளார். இந்தக் கணிப்புகள் எந்த அளவுக்கு உண்மையாகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
