பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடக்க விழாவின் போது, பஞ்சாப் மாகாண முதலமைச்சர் மரியம் நவாஸுக்கு (Maryam Nawaz) அளிக்கப்பட்ட அதீத முக்கியத்துவத்தை விமர்சித்து, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா பதிவிட்ட ட்வீட் இப்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
லாகூர் கடாபி மைதானத்தில் நடந்த விழாவில், பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி முதலமைச்சரை வரவேற்கும் வீடியோவை பகிர்ந்து, “இவரை ஏன் லார்ட்ஸ் மைதானத்தின் ராணியைப் போல நடத்துகிறீர்கள்?” என நசீம் ஷா கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தப் பதிவு வைரலான சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டதோடு, தனது கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டதாக நசீம் ஷா மழுப்பலாக விளக்கம் அளித்தார்.
The fastest hacking unhacking happened today. Naseem shah created history. pic.twitter.com/1uF2wWNIMB
— Moments & memories (@momentmemori) March 26, 2026
இருப்பினும், மத்திய ஒப்பந்தத்தில் இருக்கும் ஒரு வீரர் அரசியல் தலைவரை விமர்சித்தது விதிகளுக்கு எதிரானது எனக்கூறி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) அவருக்கு அதிகாரப்பூர்வமாக ‘ஷோ காஸ்’ (Show Cause) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குறிப்பாக, ஐஎல்டி20 (ILT20) தொடரின் போது மராத்தி வீரரிடம் இருந்து மராத்தி மொழியைக் கற்றுக்கொண்டு, “சஹா பியாயலா சலா” (டீ குடிக்கப் போவோம்) என மராத்தியில் பேசி இந்திய ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் இந்த நசீம் ஷா.
“மராத்தி பேசத் தெரிந்த வீரருக்கே இந்த நிலைமையா?” என ஒரு பக்கம் ரசிகர்கள் கிண்டல் செய்தாலும், நசீம் ஷாவின் இந்த அரசியல் மோதலால் அவர் பிஎஸ்எல் தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நசீம் ஷாவின் பதிலைப் பொறுத்தே அவர் மீது எடுக்கப்படவுள்ள இறுதி ஒழுங்கு நடவடிக்கை முடிவாகும் எனத் தெரிகிறது.
