உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மணமகள் செய்த காரியம் இப்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
திருமண ஊர்வலத்தின் போது இசைக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடிக்கொண்டிருந்த அந்த பெண் தான் புதிதாக வாங்கியிருந்த ஐபோன் 17 ரக செல்போனைத் எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த திறந்தவெளி சாக்கடையில் தவறவிட்டார்.
She jumped down a sewage drain to find her iPhone 17 Pro Max she dropped pic.twitter.com/S4nYB2vnt2
— LASHY BILLS (@LASHYBILLS) March 25, 2026
சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள அந்த போன் அழுக்கு நீரில் மூழ்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தனது விலை உயர்ந்த திருமண ஆடை அல்லது உடல் சுத்தம் எதைப் பற்றியும் கவலைப்படாமல், உடனடியாக சாக்கடைக்குள்ளேயே குதித்தார்.
ஒரு பக்கம் வானவேடிக்கை முழங்கத் திருமணம் கோலாகலமாக நடந்துகொண்டிருக்க, மறுபக்கம் பெண் பல மணி நேரம் கழிவுநீரில் தேடி தனது போனை மீட்டெடுத்தார்.
இந்த விசித்திரமான மீட்புப் பணியை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர, “கல்யாண உடையை விட ஐபோன் தான் முக்கியமா?” என நெட்டிசன்கள் அந்த இளைஞரை வகைவகையாகக் கிண்டல் செய்து வருகின்றனர்.
