மும்பை போரிவலி இரயில் நிலையத்தில் நிகழ்ந்த ஒரு பதறவைக்கும் சம்பவம், தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஒரு பயணி ஓடிக்கொண்டிருக்கும் இரயிலில் ஏற முயன்று, எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி இரயிலுக்கும் நடைமேடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் விழப் போனார். அந்த மூன்று வினாடிகள் மரணம் அவரை மிக நெருக்கத்தில் நெருங்கியது.

ஆனால், அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, தன் உயிரைப் பணயம் வைத்து அந்தப் பயணியை வெளியே இழுத்துக் காப்பாற்றினார். மரணத்தின் பிடியில் இருந்து மயிரிழையில் உயிர் பிழைத்த அந்தப் பயணியின் கண்கள் கலங்கின.

“>

மேலும் மீட்கப்பட்ட அந்தப் பயணி, தன்னை ஒரு கடவுளைப் போல வந்து காப்பாற்றிய அந்த டிக்கெட் பரிசோதகருக்கு நெகிழ்ச்சியுடன் கைகுலுக்கி தனது நன்றியைத் தெரிவித்தார். இந்த முழுச் சம்பவமும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதால் தான், இதுபோன்ற மனிதர்களின் உருவில் வருகிறார்” என நெட்டிசன்கள் அந்த அதிகாரியை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில், ஓடும் இரயிலில் ஏறுவது போன்ற ஆபத்தான செயல்களைத் தவிர்க்குமாறு இரயில்வே நிர்வாகம் மீண்டும் பயணிகளை எச்சரித்துள்ளது.