சின்னத்திரை மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரையில் ஜொலித்து வரும் நடிகை வாணி போஜன், தளபதி விஜய் குறித்துப் பேசியுள்ள உருக்கமான கருத்துக்கள் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன. “விஜய் சாருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட கால ஆசை.

ஆனால், இப்போது அவர் முழுநேர அரசியலில் இறங்கிவிட்டதால், எனது அந்த ஆசை இனி நிறைவேற வாய்ப்பில்லை” என்று அவர் மிகவும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். சினிமாவைத் தாண்டி விஜய்யின் மீது தனக்கிருக்கும் அளவு கடந்த மரியாதையையும், தான் எப்போதும் அவருக்கு ஒரு தீவிர ரசிகை என்பதையும் வாணி போஜன் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

​அதேசமயம், விஜய்யின் அரசியல் பயணம் குறித்தும் தனது அதிரடி நிலைப்பாட்டை அவர் அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “இப்போதைக்கு அதைப்பற்றி எதுவும் சொல்ல முடியாது” என்று மர்மம் நீடிக்க வைத்தாலும், விஜய்யின் அரசியல் வருகையைத் தான் முழுமையாக ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சினிமாவை விட்டுவிட்டு மக்கள் பணிக்காக விஜய் எடுத்திருக்கும் இந்த முடிவிற்குத் தனது ஆதரவு எப்போதும் உண்டு என்றும் அவர் கூறியுள்ளார். வாணி போஜனின் இந்தத் துணிச்சலான அரசியல் ஆதரவு, திரையுலகினர் மற்றும் தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.