பீகார் மாநிலம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவிலிருந்து ஹவுரா நோக்கிச் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. தண்டவாளத்தின் அருகே நின்றுகொண்டு பான் மசாலாவை துப்ப முயன்றபோது, அதிவேகமாக வந்த ரயில் அந்த நபர் மீது மோதியது.
இந்த நடுக்கத்தை ஏற்படுத்தும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. விபத்து நடந்த உடனே அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படையினரும் போலீசாரும் காயமடைந்தவரை மீட்டு பார் சதர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
<a href=”http://
Man approaches the edge of the platform to spit his Khaini. Died after hit by an incoming Vande Bharat at Barh station in Bihar. pic.twitter.com/BiYfbwsJIo
— Piyush Rai (@Benarasiyaa) March 26, 2026
“>
இந்தச் சம்பவம் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் பொதுமக்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதையும், பயணிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
