மத்திய கிழக்கில் ஈரான் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அதன் பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநில முதலமைச்சர்களுடன் காணொளி காட்சி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார்.
குறிப்பாக, இந்த யுத்தத்தால் இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படுமா என்பது குறித்தும், அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இருப்பினும், தற்போது சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வரும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்தப் பாதுகாப்புக் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. உலகளாவிய இந்தப் பதற்றத்தால் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கங்களை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் இந்த கூட்டத்தில் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
